டிசம்பரில் கொரோனா தடுப்பு மருந்து – சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு!!

0

கொரோனா தொற்று தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் மருத்துவ துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது, ‘கோவிஷில்டு’ மருந்து டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

விலை அதிகமா

கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இறப்பு எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டி வருகிறது. இது தொற்றும் முறை வேகமாக இருப்பதால், தடுப்பு மருந்து மட்டுமே தீர்வாக பார்க்கப்படுகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் நூற்றுக்கும் மேலான மருத்துவ நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டன் நிறுவனம் அஸ்ட்ராஜென்கா இணைந்து உருவாக்கும் ‘கோவிஷில்டு’ நம்பிக்கை தரும் விதத்தில் உள்ளது. இது மூன்றாம் கட்ட மனித பரிசோதனையில் உள்ளது. இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்துடன் இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்.இ.ஐ.,) புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கியுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

எஸ்.இ.ஐ., தலைமை செயல் அதிகாரி அடர் பொன்னவலா கூறுகையில், ”கோவிஷில்டு தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் டிசம்பர் மாதம் வந்து விடும். இந்தியாவில் ஜனவரியில் சந்தைக்கு வரும். இது குறித்த தகவல் அடுத்த மூன்று வாரங்களில் எங்களுக்கு கிடைக்கும். ‘கோவிஷில்டு’ பாதுகாப்பானது என அறிவித்த உடன், அவசர கால பயன்பாட்டிற்கான லைசென்ஸ் பெற விண்ணப்பிப்போம். இதன் விலை, கொரோனா பரிசோதனைக்கான செலவை விட குறைவாக இருக்கும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here