முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை முழுமையாக தடுக்க வேண்டுமா?? இதோ சூப்பர் டிப்ஸ்!!

0
face pimples

ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவர்க்கும் இளம் வயதில் முகப்பருக்கள் வருவது இயற்கையான ஒன்று தான். ஆனால் நாளடைவில் அதனை கவனிக்காமல் அப்படியே விட்டுவிடுவதால் முகத்தில் தழும்பு போல ஏற்பட்டு நிரந்தரமாக கருமையாக மாறுகிறது. இப்பொழுது முகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மறைய என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

முகப்பருக்கள் மறைய..

பொதுவாக இளம் வயதினருக்கு அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் முகப்பருக்கள் ஏற்படுகிறது. சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இந்த பருக்கள் தோன்றும். ஆனால் இந்த பருக்கள் வருவது சாதாரணம் தான் ஆனால் அதுவே தழும்பாக மாறும் அளவிற்கு இருந்தால் அது முக அழகையே கெடுத்து விடும். இந்த பருக்களை கிள்ளி விடுவது, அதனை கவனிக்காமல் அப்படியே விட்டு விடுவது போன்றவற்றால் தழும்புகள் ஏற்படும். இதனால் கன்னங்களில் குழிகள் கூட ஏற்படுகிறது.

face pimples
face pimples
  • மேலும் அந்த பருவை கிள்ளுவதால் அதில் இருக்கும் கிருமிகள் மற்ற இடத்திற்கும் பரவி மேலும் பருக்களை ஏற்படுத்தி விடும். பருவால் ஏற்படும் தழும்புகளை தடுக்க என்ன என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
  • முகத்தில் பருக்கள் தோன்றினால் அதனை கிள்ளாமல் அந்த இடத்தில் மஞ்சள் மற்றும் தயிரை கலந்து முகத்தில் தடவ வேண்டும். இதனால் பருக்கள் விரைவாக மறையும்.
golden facial
golden facial
  • மேலும் வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து அந்த நீரை காலையில் பருகி வந்தால் உடல் சூடு குறைவதுடன் முகத்தில் ஏற்படும் தழும்புகள் நாளடைவில் மறையும். ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து முகத்தில் தடவினால் முகப்பருக்கள் வருவதை தடுக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

  • சந்தனத்துடன் சிறிது பன்னீரை சேர்த்து கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மறைந்து முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும். ஆலிவ் எண்ணெயை இரவு நேரத்தில் முகத்தில் மசாஜ் செய்து விட்டு தூங்கினால் முகத்தில் உள்ள வடுக்கள் மறையும் அல்லது தொப்புளில் வைத்து தூங்கினால் முகம் பளபளப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here