இந்த  ராசிக்காரங்களா நீங்க?? தொழில் பெறுக போகுது, காதல்  கைகூட  போகுது.., இன்றைய ராசிபலன்!!

0
மிதுனம், சிம்மம், மகர ராசியை சேர்ந்தவர்களா நீங்க?? ஜாக்கிரதையா இருந்துக்கோங்க மக்களே!!
மிதுனம், சிம்மம், மகர ராசியை சேர்ந்தவர்களா நீங்க?? ஜாக்கிரதையா இருந்துக்கோங்க மக்களே!!

enewz வாசகர்களே, இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமையப்போகிறது என்பதை இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம். தினமும் உங்கள் ராசி குறித்த தகவலுக்கு தொடர்ந்து படிக்கவும்.

மேஷம்:

வீரமும் விவேகமும் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே, இன்றைக்கு அடிக்கடி உங்களுக்கு பிரச்சனை வந்து போகும். பொறுமையுடன் இருந்தால் வெற்றி நிச்சயம். வேலை தேடுபவர்களாக இருந்தால், நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். ஆகமொத்தம் பொறுமையால் சாதிக்கும் நாள் இது.

ரிஷபம்:

நேர்த்தியான குணமுடைய ரிஷப ராசி நேயர்களே, உங்களது தொழிலை விரிவுப்படுத்த உகந்த நாள் இது. தூரதேச பயணங்கள் கூட ஏற்படலாம். பேசும்போது வார்த்தையை பார்த்து விடுவது உங்களுக்கு நன்மை பயக்கும். நட்பு வட்டாரங்களில் இருந்து சற்று தள்ளியே இருங்கள். உங்கள் செயலுக்கு ஏற்றவாறு உங்களுக்கு இன்றைய நாளில் பலன் கிடைக்கும்.

மிதுனம்:

பொறுமையும் பக்குவமும் நிறைந்த மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும் நேரம் இது. பொறுமையுடன் கையாண்டால் ஒற்றுமையை பேணலாம். மேலும் உங்களது தேவைகள் பூர்த்தியாகும் நாள். கண்ட பொருட்களை சாப்பிடாமல் இருந்தால் நோய்களில் இருந்து தவிர்க்கலாம். வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும் நாள்.

கடகம்:

அந்த வெண்ணிலாவை போல குணம் படைத்த கடக ராசி நேயர்களே, இன்றைய நாளில் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தேவையில்லாத பயணங்களை தவிப்பது மூலம் நன்மை அடையலாம். நட்பு வட்டாரங்களில் சில பிரச்சனைகள் வந்து செல்லும். துரோகிகளை கண்டறியும் நாள் இது. பல பாடங்களை கற்றுக்கொள்ளும் நாளாக அமையும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

சிம்மம்:

வீரமும், புத்திசாலித்தனமும் நிறைந்த சிம்மராசி நேயர்களே, பிள்ளைகளால் உங்களுக்கு நன்மை உண்டாகும். குலதெய்வ கோவிலுக்கு சென்று வர குடும்பத்தில் நன்மை உண்டாகும். பிறரை வற்புறுத்தி எந்த விஷயத்தையும் செய்யாதீர்கள். மேலதிகாரியிடம் இருந்து பாராட்டுக்கள் குவியும் நாள்.

கன்னி:

அழகும், ஆற்றலும் நிறைந்த சிம்ம ராசி நேயர்களே, பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. வீண் விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். நன்மை பயக்கும் நாள். உங்களது ஆசையை நிறைவேற்றி கொள்ள இந்த நாள் உங்களுக்கு உதவியாக இருக்கும். அதிர்ஷ்டங்கள் குவியும் நாள் என்பதால் அதனை பயன்படுத்தி கொள்வது உங்கள் சாதூரியத்தில் தான் உள்ளது.

துலாம்:

நேர்மையும், நேர்த்தியும் கொண்ட தூலம் ராசி நேயர்களே, உங்களுக்கு இது கொஞ்சம் போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். பணியிடங்களில் நிறைய பிரச்சனைகள் வர கூடும். மேலும் வீட்டில் பெற்றோர்கள், பிள்ளைகள் மத்தியில் ஆதரவு கிட்டும். கொஞ்சம் மோசமான காலமாக இருந்தாலும் குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நன்மை தரும்.

விருச்சிகம்:

கோவத்திலும் நேர்மையுடன் யோசிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, உங்களுக்கு இன்று வெற்றி கிட்டும் நாளாக அமையும். எடுத்த காரியத்தை நேர்த்தியாக செய்து முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்கள் பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டும். வீட்டில் விசேஷங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.

தனுசு:

பலனை எதிர்பார்க்காமல் அயராது உழைக்கும் தனுசு ராசி நேயர்களே, இன்றைக்கு உங்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு ஊதியம் கிட்டும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த காரியம் கைகூடும். உங்கள் காதலுக்கு க்ரீன் சிக்னல் கிடைக்க கூட வாய்ப்பு உள்ளது. வெளியில் இருந்து வர வேண்டிய பணம் வந்து சேரும். அதிர்ஷ்டங்கள் நிறைந்த நாள் இன்று.

மகரம்:

அன்பும், பண்பும் நிறைந்த மகர ராசி நேயர்களே, நினைத்த காரியங்கள் கைகூடும் நாள். பணியிடத்தில் அலைச்சல் ஏற்படும். வேலைகளை நிதானமாக முடித்தால் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. கணவரின் ஆதரவும் அன்பும் கிட்டும். அந்நியோன்யம் பெருகும். குலதெய்வ வழிபாடு நன்மை பயக்கும்.

கும்பம்:

சீரும் குணமும் அதே நேரத்தில் நிதானமும் நிறைந்த கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் நீண்ட நாட்கள் இருந்த சிக்கல் நிவர்த்தியாகும். வராமல் இருந்த பரம்பரை சொத்துக்கள் கைகூட அதிக வாய்ப்புள்ளது. உங்கள் காதலி/காதலன் முன்பை விட உங்கள் மீது அதிக காதலுடன் நடந்து கொள்வார். நினைத்த செயலை செய்து முடிக்கும் நாள் இன்று.

மீனம்:

எதையும் நேருக்கு நேர் தைரியமாக பேசும் குணம் படைத்த மீனா ராசி நேயர்கள், உத்யோகத்தில் பணி சுமை கூடும். உடன்பிறப்புகளால் தொல்லைகள் வந்து சேரும். சாமர்த்தியமாக செயல்பட்டால் இன்று வர கூடிய பெரிய பிரச்சனையில் இருந்து விடுபடலாம். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here