IT ஊழியர்களே உஷார் – இதை மட்டும் செய்யாதீங்க! இல்லைனா வேலைய இழந்து நடுத்தெருவுல நிக்கணும்?

0
IT ஊழியர்களே உஷார் - இதை மட்டும் செய்யாதீங்க! இல்லைனா வேலைய இழந்து நடுத்தெருவுல நிக்கணும்?

சமீபத்திய மாதங்களாக , மூன்லைட்டிங் என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம். இந்நிலையில் இது குறித்து முக்கிய கருத்தை TCS தலைமை இயக்க அதிகாரி N கணபதி சுப்ரமணியம் முன்வைத்துள்ளார்.

மூன்லைட்டிங்:

கடந்த சில மாதங்களாக இந்திய IT துறையில் ஊழியர்கள் மூன்லைட்டிங் செய்வது பெரும் விவாதமாக உள்ளது. அண்மையில் விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்களில் 300 பேர், மூன்லைட்டிங் செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் WFH பார்த்து வந்த ஊழியர்கள் பெரும் மூன்லைட்டிங்கில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, மூன்லைட்டிங் செய்ய கூடாது என சில நிறுவனங்கள் திட்டவட்டமாக சொல்லிவிட்டன. அதாவது மூன்லைட்டிங் என்பது ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர், அந்த நிறுவனத்திற்கு தெரியாமல் பிற நிறுவனங்களுக்காக வேலை பார்த்து வருவது தான்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில் மூன்லைட்டிங் முறையில் ஈடுபட்ட 300 ஊழியர்களை விப்ரோ அதிரடியாக வேலை நீக்கம் செய்தது குறித்து TCS தலைமை இயக்க அதிகாரி N கணபதி சுப்ரமணியம் கருத்து தெரிவுத்துள்ளார். அதாவது மூன்லைட்டிங்கில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது விப்ரோ இப்படி கடுமையான நடவடிக்கை எடுத்தது மிக கவலைக்குரிய விஷயமாக உள்ளது, இந்த நடவடிக்கையால் ஊழியர்களின் குடும்பம் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது. மேலும் ஊழியர் அடுத்து வேறு ஒரு வேலைக்கு செல்லும் போது, இந்த நடவடிக்கை அவரது வேலைக்கு ஆபத்தாக கூட முடியலாம்.

தமிழக பள்ளிகளில் தீபாவளிக்கு அடுத்த நாள்(25.0.2022) விடுமுறை? குவியும் கோரிக்கை! அரசின் இறுதி முடிவு!!

எனவே நிறுவனங்கள் கொஞ்சம் கருணை காட்டி, இந்த சிக்கலை சில வார்னிகுடன் கையாள வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த இக்கட்டான சூழலில், மூன்லைன்ட்டிங் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிசிஎஸ் நிர்வாகம், அதன் ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் கூடுதலான வேலைகளை (GIGs) செய்யப் புதிய தளத்தை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here