ஒரு ரன்னில் தலைகீழாக மாறிய ஆட்டம்.., T20WC-ல் நுழைய வாய்ப்பே இல்லை..,கடைசில இப்படி ஆயிடுச்சே!!

0
ஒரு ரன்னில் தலைகீழாக மாறிய ஆட்டம்.., T20WC-ல் நுழைய வாய்ப்பே இல்லை..,கடைசில இப்படி ஆயிடுச்சே!!

T20 உலக கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் நமீபியா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

உலக கோப்பை

ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த தகுதி சுற்று ஆட்டத்தில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் அந்த அணிகளுக்கு இடையிலான முதல் நான்கு போட்டி முடிவடைந்து விட்டது. இதனை தொடர்ந்து இன்று 5வது தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில் நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. இந்த இரு அணிகளும் இதற்கு முன்னர் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்ததது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நமீபியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

விராட்டின் ஒற்றை கை கேட்ச் சாதனை, பாராட்டி தள்ளிய அவரின் காதல் மனைவி.., வைரலாகும் பதிவு!!

அதன்படி முதலில் களமிறங்கிய இந்த அணியினர் 20 ஓவர் முடிவில் 121 ரன்கள் குவித்தனர். இதனை அடுத்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி அதிரடியாக விளையாடி 19.3 ஓவர் முடிவில் வெறும் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 122 ரன்கள் குவித்து வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி தற்போது சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதன் மூலம் ஆர்வமற்று நடைபெற்றுக் கொண்டிருந்த உலகக்கோப்பை தொடர் தற்போது தான் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இதனால் மீதமுள்ள தகுதி சுற்று போட்டிகளில் எந்த அணி வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடருக்கான சூப்பர் 12 சுற்றில் நுழையப் போகிறார்கள் என இன்னும் இரு தினங்களில் முடிவாகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here