அழகான கண்களை பெறுவதற்கும், கண் சம்பந்தமான பிரச்சனைகள் தீருவதற்கும் – சூப்பரான டிப்ஸ்!!

0

நமக்கு மிகவும் அழகு கண்கள். கண்களை எப்படி பராமரிப்பது?? நம் அன்றாட வாழ்வில் அதிகமாக கண்களுக்கு வேலை கொடுக்கிறோம். இதனால், கண்களின் அழகு குறைகிறது. கரு வளையம், கண் சோர்வு, கண் எரிச்சல், கண்களைப்பு போன்ற ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவற்றை, எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

கண் – களைப்பு நீங்க:

ஒரு கைப்பிடி அளவு புதினா இலையை எடுத்து சுத்தம் செய்து அரைத்து சாறு எடுக்க வேண்டும். இந்த புதினா சாறை கண்களை சுற்றி தடவ வேண்டும். அரை மணிநேரம் கண்களை மூடி தூங்கவும். பின் குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு, செய்வதன் மூலம் கண்களில் உள்ள களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சி அடைகிறது.

கண் – கருவளையம் நீங்க:

சிலருக்கு முகம் அழகாக இருக்கும். கண்கள் கூட அழகாகத்தான் இருக்கும். ஆனால், கண்களுக்கு சரியான ஓய்வு கொடுக்காததாலும், செயற்கை பொருட்களை அதிகமாக முகத்திற்கு பயன்படுத்துவதாலும் கண்களை சுற்றி கருப்பாக இருக்கும். இதற்கு, உருளைக்கிழங்கின் சாறை எடுத்து ஒரு பஞ்சில் தொட்டு கண்களை சுற்றி தேய்த்துவிட்டு பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கண் – இமை முடி வளர:

எலுமிச்சை பழத்தோலை மட்டும் சீவி ஆலிவ் எண்ணெய் அல்லது ஆமனுக்கு எண்ணையில் ஒரு வாரம் ஊறவைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து அந்த எண்ணெய்யை எடுத்து இரவு தூங்க செல்வதற்கு முன் கண் இமை முடிகளின் மீது தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும். கண்களுக்கு அதிக அழகை கொடுப்பது இமை முடிகள் தான்.

கண் – எரிச்சல் போக:

அதிகமாக செல்போன்களை பயன்படுத்துவதாலும், கணினி போன்றவற்றில் வேலை பார்ப்பதாலும் கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. சரியாக தூங்கவில்லை என்றாலும் கண் எரிச்சல் வரும். இதற்கு, அடிக்கடி குளிர்ந்த நீரால் கண்களை கழுவ வேண்டும். அல்லது ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் கல் உப்பை கலக்கி கண்களை அலம்பி வந்தால் கண்கள் மின்னுவதுடன் கண் எரிச்சல் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here