திருமணத்திற்காக மதம் மாறினால் 5 வருட சிறை தண்டனை – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

0

வேறு ஒரு மதத்தை சேர்ந்த நபர் ஒருவர், குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து பின்னர் கட்டாயமாக தனது மதத்திற்கு மாற்றுவது “லவ் ஜிஹாத்” என கூறப்படுகிறது. இதற்கு எதிரான சட்டத்தை பரிசீலிப்பதாக கர்நாடக மற்றும் ஹரியானா அரசாங்கங்கள் கூறிய நிலையில், மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இந்த பிரச்சினையை எதிர்கொள்ள மாநில அரசு விரைவில் ஒரு சட்டத்தை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

லவ் ஜிஹாத்:

லவ் ஜிஹாத்தை சமாளிக்க அடுத்த சட்டசபை அமர்வில் ஒரு மசோதா கொண்டு வரப்படலாம் என்று மிஸ்ரா தெரிவித்துள்ளார். அதில் ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவித்த அமைச்சர், “திருமணத்திற்கான தன்னார்வ மத மாற்றத்திற்கு, ஒரு மாதத்திற்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிப்பது கட்டாயமாகும்” என கூறியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நவம்பர் 6 ம் தேதி, கர்நாடக முதலமைச்சர் பி எஸ் எடியுரப்பா, “லவ் ஜிஹாத்” என்ற பெயரில் மத மாற்றத்திற்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டுவருவதற்கான முடிவில் ஆர்வமாக இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது. அதே நாளில், ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் மாநில சட்டமன்றத்தில், இதேபோன்ற சட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், இது குறித்து இமாச்சல பிரதேச நிர்வாகத்திடம் தகவல் கோரியுள்ளதாகவும் கூறினார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

செப்டம்பர் மாதத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் திருமண நோக்கத்திற்காக மட்டுமே மத மாற்றத்தை ஏற்க முடியாது என்று கூறியிருந்தது. தலைநகர் டெல்லியில் சில நாட்களுக்கு முன்னர் லவ் ஜிஹாத் விளைவாக கல்லூரி மாணவி ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here