Saturday, May 18, 2024

தமிழகத்தில் வெள்ள அபாயத்தில் 4,133 பகுதிகள் – அமைச்சர் ஆர்பி உதயகுமார் விளக்கம்!!

Must Read

தமிழகத்தில் கனமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வரும் நிலையில் அதற்கு ஏற்றார் போல் அரசு சார்பில் எடுக்கப்பட்டு இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் விளக்கி கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கனமழை பொழிவு குறைவு தான் என்றும் தெரிவித்துள்ளார்.

வெளுத்து வாங்கும் கனமழை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் துவங்கியது. இந்த ஆண்டு எப்போதும் போலவே மழை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்து வருகின்றது. தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. வானிலை ஆய்வு மையம் சார்பில் கடந்த சில நாட்களாக பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இன்று தூத்துக்குடி மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு “RED அலெர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் கனமழை பெய்யும் சமயம் மக்கள் யாரும் பழைய கட்டிடங்களில் இருக்க வேண்டாம் என்றும் கவனமாக பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதற்கிடையில் கனமழை எச்சரிக்கையாக அரசு சார்பில் பல்வேறு பேரிடர் நடவடிக்கைகளும் எடுக்கபட்டுள்ளன. இது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாவட்ட வாரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்”

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்படவுள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது வரை பாதிக்கப்படும் இடங்களாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதிகமான பாதிப்புகள் ஏற்படும் வகையில் 297 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அப்படி வெள்ளம் அல்லது பிற பாதிப்புகள் ஏற்பட்டாலோ அதற்கு எதுவாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கிக்கொள்ள வசதியாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன”

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

“கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழகத்தில் மழைப்பொழிவு குறைந்து தான் உள்ளது. இந்த ஆண்டு பெய்திருக்கும் மழையானது கடந்த ஆண்டுகளை விட 40 சதவீதம் குறைவு” இவ்வாறாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -