ஜூன் 15ல் தேர்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது – ஜூலையில் நடத்த உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்..!

0
Exam
Exam

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. அதற்கு மாற்றாக ஜூலை மாதம் 2வது வாரத்தில் நடத்திக் கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் வரும் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத் தலைவர் பகவத்சலம் வழக்கு தொடர்ந்தார். இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், ஊரடங்கு அமலில் உள்ள பொழுது 10ம் வகுப்பு தேர்வை நடத்த ஏன் அவசரம் காட்டுகிறீர்கள்? மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரின் உடல்நலத்தையும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ள வேண்டுமா? என அடுக்கடுக்காக கேள்விகளை அரசுக்கு நீதிபதிகள் எழுப்பினர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அதுமட்டுமின்றி மாணவர்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது, 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல் துறையினர் & வருவாய்த் துறையினர் என தேர்வுப் பணியில் ஈடுபடும் அனைவரையும் இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா? எனவும் கேள்விகள் எழுப்பினர். முடிவில் வரும் ஜூன் 15ம் தேதி தேர்வுகளை நடத்த கட்டாயம் அனுமதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், மாற்றாக ஜூலை 2வது வாரத்தில் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

மருந்து கசப்பைப் போக்க மாணவர்களுக்கு லாலிபாப் திட்டம் – பறிபோன அமைச்சர் பதவி..!

இது குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் பிற்பகல் 2.30க்குள் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் நீதிமன்றமே தாமாக முன்வந்து தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டி இருக்கும் என எச்சரித்து உள்ளனர். ஏற்கனவே தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் முதல்வருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு இருந்தார். எனவே தமிழகத்தில் 3வது முறையாக பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here