அடுத்த போட்டியிலும் இதை தான் செய்வேன்.., எதிரணிக்கு சவால் விட்ட ஹர்திக் பாண்டியா!!!

0
அடுத்த போட்டியிலும் இதை தான் செய்வேன்.., எதிரணிக்கு சவால் விட்ட ஹர்திக் பாண்டியா!!!
அடுத்த போட்டியிலும் இதை தான் செய்வேன்.., எதிரணிக்கு சவால் விட்ட ஹர்திக் பாண்டியா!!!

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்தியா வெற்றி பெற்றது குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி வென்று அசத்தியுள்ளனர். இந்த மூன்று போட்டியிலும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார். அதுவும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் வரிசையில் தொடர்ந்து தடுமாற்றம் அடைந்த போது கடைசியில் நிலைத்து நின்று ஆடி அரை சதம் விளாசினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதேபோன்று பந்து வீச்சிலும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இந்த போட்டி குறித்து ஹர்திக் பாண்டியாவிடம் சில விஷயங்கள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் நான் எப்போதும் போல இல்லாமல் பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி சில வித்தியாசமான முறையில் விளையாடினேன். ஆனால் இந்த முயற்சி எனக்கு இந்த அளவுக்கு கை கொடுக்கும் என்று தெரியவில்லை.

ICC- யின் சிறந்த அசோசியேட் விருது அறிவிப்பு.., தட்டிச் சென்ற முக்கிய வீரர்கள்!!!

இனி வரும் போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு தொடர்ந்து முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்தது மனசுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. இதன் மூலம் என்னுடைய இன்சுவிங் நன்றாக முன்னேறி வருகிறது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here