அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?? அப்போ இதை செய்யுங்க!!!

0

பெரும்பாலும் நம் அழகை வெளிக்காட்டுவதில் தலைமுடி தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் நாம் அனைவரும் நம் கூந்தலை பாதுகாப்பது அவசியம். ஆனால், இன்று பலருக்கு இருக்கும் தலையாய பிரச்சனையில் முடி உதிர்தல், இளநரை, முடியின் வறட்டுத்தன்மை போன்றவையும் ஒன்று. சிலருக்கு கூந்தல் நீளமாக இருக்கும், ஆனால் போதிய அடர்த்தி இருக்காது. அந்த பிரச்சனை உள்ளவருக்கு இந்த முறை பயனளிக்கும் .

ஒற்றைக் கூந்தல் கற்றை கூந்தலாக மாற :

பொதுவாக, முடி உதிர்வதை தடுத்தாலே, அடர்த்தி குறைவு போன்ற பிரச்சினையில் இருந்து விடுபடலாம். புரத குறைபாடு காரணமாகவும் இது நிகழும். கறிவேப்பிலை, வெந்தயம், விட்டமின் இ நிறைந்த உணவுகளை அன்றாட வாழ்வில் எடுத்தாலே இந்த பிரச்சனைக்கு பாதி தீர்வை காணலாம். வாரம் இரண்டு முறை தலைக்கு குளிப்பதை வழக்கமாக்கி கொள்வது நல்லது. இதனால் தலைமுடி வறட்சியடையாமல் தடுக்க உதவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது திராட்சை ரசம், அப்பம் வழங்கலாம்!!

சின்ன வெங்காயம் , வெள்ளைப்பூண்டு ஆகிய இரண்டையும் சேர்த்து அரைத்து சாறெடுத்து கொள்ளுங்கள். பின்பு, அந்த சாற்றில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 4 விட்டமின் இ காப்ஸ்யூல்களை சேர்த்து நன்றாக கலந்து அந்த கலவையை தலையில் பூசி வர , தலை முடி மிருதுவாகவும் ,பொலிவாகவும் மாறுவதோடு, அடர்த்தியாகவும் இருக்கும். வெங்காயத்தில் உள்ள மூலப்பொருட்கள் கூந்தலின் நிறத்தை பாதுகாக்கிறது. இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.  மேலும், இது ஆண்களின் வழுக்கை பிரச்சனைக்கும் நல்லதொரு தீர்வாக அமையும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here