மேற்கு வங்கத்தில் வாக்காளர்களை மிரட்டி துப்பாக்கி சூடு – சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு!!

0

மேற்குவங்கத்தில் தற்போது முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது தேர்தல் நேரத்தில் அந்த பகுதியில் வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

மேற்குவங்கம்:

இந்தியாவில் மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தமிழகம், புதுவையில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்தார். ஆனால் மேற்கு வங்கம் சற்று பதட்டமான பகுதி என்பதால் அங்கு 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அங்குள்ள 294 தொகுதிகளிலும் மொத்தம் 8 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அதற்கான முதல் கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. அதன்படி முதல் கட்டத்தில் மொத்தம் 30 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெருகிறது. தேர்தல் நடைபெறும் ஓர் தொகுதியான பகவான்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடர்வதற்கு முன்பு ஓர் அதிர்ச்சிகரமான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

அதுஎன்னவென்றால் அங்கு வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதனால் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here