மீண்டும் நடைமுறைக்கு வருகிறதா வாக்கு சீட்டு முறை?? தேர்தல் ஆணையம் விளக்கம்!!

0

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வாக்கு சீட்டு முறை நடைமுறைக்கு வருவதை பற்றி தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆயிர கணக்கில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து கட்சிகள் பின்பற்றுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போதைய காலங்களில் தேர்தல் அனைத்தும் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் வாக்குப்பதிவு மிக எளிமையாகிவிட்டது. இதனால் பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பியது. தேர்தலில் தோற்ற கட்சியினர் இயந்திரத்தில் கோளாறு இருப்பதாக தொடர்ந்து குறை கூறி வருவார்கள். இதுபோல் பல பிரச்சனைகள் கிளம்பும். தற்போது இதுகுறித்து பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

தமிழக தேர்தலில் முன்பு போல் வாக்கு சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் இயந்திரம் குறித்த முறையான பயன்பாடு நடைமுறைகள் இல்லை என்றும் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இதற்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. அதுஎன்னவென்றால் மீண்டும் வாக்கு சீட்டு முறை கொண்டு வரமுடியாது என்றும் இயந்திரம் முறையே நடைபெறும் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here