மாஸ்க் அணியாவிட்டால் கொரோனா வார்டில் பணி – நீதிமன்ற உத்தரவிற்கு தடை!!

0

இந்தியாவில் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாவிட்டால் அவர்களுக்கு அரசு சார்பில் வினோதமான தண்டனைகள் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் மாஸ்க் அணியாவிட்டால் கொரோனா மையத்தில் பணி புரிய வேண்டும் என்று குஜராத் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவினை தற்போது உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

திருமண விழாவில் சம்பவம்:

கடந்த சில நாட்களுக்கு முன் குஜராத் மாநிலத்தில் ஒரு திருமண விழாவில் பலரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளான முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை சரியாக பின்பற்றாமல் இருந்த வீடியோ அனைவர் மத்தியிலும் மிகவும் வேகமாக பரவியது. இதனை அடுத்து அந்த வீடியோ குஜராத் மாநில நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நீதிபதிகள் தாங்களாகவே முன்வந்து இதனை வழக்காக பதிவு செய்து விசாரித்தனர். இதற்கு வித்தியாசமான முறையில் தண்டனை வழங்க வேண்டும் என்ற நோக்கில் நீதிபதிகள் முகக்கவசம் அணியாதவர்களை பிடித்து கொரோனா மையத்தில் கட்டாயமாக வேலை பார்க்க வைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு வலியுறுத்தியதோடு, அதிரடியாக உத்தரவையும் பிறப்பித்தது.

தமிழகத்தில் அரசு பேருந்துகள் ஓடாது??

இதனை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக மத்திய அரசு தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று என்றும் அவர்களை அவ்வாறாக பணியமர்த்தினால் மேலும் வைரஸ் பரவும் அபாயம் தான் ஏற்படும் என்றும் கூறியது. இதனை பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவிற்கு தற்போது தடை விதித்துள்ளனர். ஆனால், மக்கள் அனைவரும் இன்னும் கவனமுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here