தமிழில் குடமுழுக்கு விழா நடைபெறவில்லை என்றால் 10 லட்சம் அபராதம் – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு!!

0

தமிழ்நாட்டில் அனைத்து கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒருதடவை குடமுழுக்கு விழா நடத்துவது வழக்கம். இந்நிலையில் தமிழ் மொழியிலும் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

குடமுழுக்கு விழா

குடமுழுக்கு விழா என்பது இந்து கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கும்பாபிஷேக விழாவாகும். இந்த விழாவில் கலசத்தின் மேல் குடத்தால் நீர் ஊற்றி மந்திரங்களை சொல்லி கும்பாபிஷேகம் செய்வர். இதற்கு பல பக்தர்களும் கலந்துகொள்வது வழக்கம். இந்த குடமுழுக்கு விழாவின் சமஸ்கிரத மந்திரங்களை அதிகமாக உபயோகிப்பதாக குற்றசாட்டுகள் நிகழ்ந்து வருகிறது.

இதற்கு கோர்ட்டில் வழக்கும் போடப்பட்டது. இதன் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் இனிமேல் தமிழிலும் குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இது போன்ற வழக்குகள் மீண்டும் தொடுக்கப்பட்டால் அறநிலைய துறைக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால் நீதிமன்றத்தை நிராகரித்த வழக்காக எடுத்துக்கொள்ளப்படும். மேலும் 10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here