ஜிஎஸ்டி வரி அதிகரிக்கும் பொருட்கள் பட்டியல் – வெளியான முழு விபரம்!!

0

மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தலைமலையில் நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் நடைபெற்ற நிலையில் வரி உயர இருக்கும் பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில்

45வது ஜிஎஸ்டி கவுன்சில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவதை பற்றிய விவாதம் நடைபெற்றது. ஆனால் கடைசியில் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது அவசியமற்றது முடிவெடுக்கப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி விகிதம் பல பொருட்களுக்கு மாற்றியமைக்கபட்டுள்ளது. இந்நிலையில் வரி உயர/குறைய வாய்ப்பிருக்கும் பொருட்கள் பற்றிய விவரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

5% லிருந்து 18% ஆக மாறும் பொருட்கள்

தேங்காய் எண்ணெய், இரும்பு, காப்பர். அலுமினியம்.

5% லிருந்து 12% ஆக மாறும் பொருட்கள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கருவிகள். உதிரி பாகங்கள்

12% லிருந்து 18% ஆக மாறும் பொருட்கள்

பேனாக்கள், பிளாஸ்டிக் பொருட்கள், அட்டை பேட்டிகள், பைகள், பேக்கிங் கண்டைனர்கள்.

5 சதவீதம் வரி விதிப்பு

தூய மருதாணி பவுடர், ஸ்விக்கி, சோமேடோ உணவுகள்.

18 சதவீதம் வரி விதிப்பு

நறுமண இனிப்பு பாகு

இது போன்ற பல பொருட்களுக்கு வரி விதிப்பால் விலை அதிகரிக்க கூடும் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here