தேவையென்றால் மட்டும் ஆபீஸ் போங்க, இல்லைனா வீட்டுல இருந்தே வேலை பாருங்க – ஐடி துறைக்கு உத்தரவு

0

கொரோன பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் மிகவும் மோசமடைந்துள்ளது.உயிரிழப்பிலும்,பொருளாதார இழப்பிலும் மக்கள் மற்றும் அணைத்து நாட்டினரும் கவலையில் உள்ளனர்.அனைத்து தொழில் நிறுவனங்களும் IT நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ளது.எனவே அரசு  IT ஊழியர்களை ஊரடங்கு முடியும் வரை வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியது.

IT துறை வீழ்ச்சி

கொரோனா வைரஸ் நோயால் IT துறை மிகவும் விழுந்துள்ளது.IT ஊழியர்கள் தங்களது வீட்டில் இருந்தவாறே வேலை செய்து வருகிறார்கள் அனால் IT வேலைவாய்ப்பு இப்பொழுது குறைந்து வருவதாக கடந்த மாதம் வெளிவந்த அறிக்கையில் மூலம் தெரிந்தது. கொரோனா வைரஸ் நோயால் மற்றும் கொரோனா பரவளையும் தடுக்க நிர்வாக குழு ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டு உத்தரவிட்டது. தகவல் தொழில் நுட்பம் மற்றும் பயோ டெக்னாலஜி நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலையை தொடர்ந்து வந்தன.

பி.எஸ் எடியூரப்பா உத்தரவு

இந்தியாவில் மிகவும் அதிகமாக IT நிறுவங்கள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் முன்னாள் போட்ட உத்தரவை அரசு வாபஸ் பெற்றுள்ளது. முதலமைச்சர் பி.எஸ் எடியூரப்பா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அத்தியாவசிய மற்றும் முக்கியமான சேவைகள் மட்டும் செய்ய முக்கியமான பதவியில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் மற்ற ஊழியர்களை வழக்கம் போல வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

விப்ரோ தலைவர் ட்வீட்

விப்ரோ தலைவர் பிரேம்ஜி ரிஷாத் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.அதில் 93%விப்ரோ ஊழியர்கள் தங்களது வீட்டில் இருந்தே வேலை செய்யவதற்கான ஒப்புதல்களையும் அதற்கு தேவையான ஆவணங்களையும் பெற்று கொண்டனர்.இப்படிபட்ட சூழ்நிலையிலும் எங்களது ஊழியர்கள் வேலை செய்கின்றனர் தானும் வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.எங்களது திட்டமான 5ஜி சேவைக்காக விப்ரோ ஆய்வகங்களில் அதற்கான சோதனையும் செய்து வருகின்றனர் வீட்டில் இருந்தே பணியாற்ற முடியாத ஊழியர்கள் மட்டும் எங்களது அலுவகம் சென்று வர வேண்டி இருப்பதால் அவர்கள் மட்டும் சென்று வருகின்றனர் என விப்ரோ தலைவர் பிரேம்ஜி பதிவிட்டுள்ளார்.

மற்ற IT நிறுவனங்கள் கூறுகையில்

இன்ஃபோசிஸ், மைண்ட் டீரி, டெல் டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்கள் கூறுகையில் தங்களது ஊழியர்களையும் அவர்களது வீட்டில் இருந்தவாறே வேலை செய்யுமாறு கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.மும்பை மற்றும் பெங்களுரு உள்ளிட்ட நகரங்களில் மீண்டும் IT ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

பயோகான் நிறுவனம் மும்பையை சேர்ந்த டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் தனது 25% வருகையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. பெங்களூரை தளமாகக் கொண்ட பயோகான் நிறுவனம் அத்தியாவசிய மருந்து உற்பத்தியை தொடர்ந்து இயக்கும் என்றும் என்றும் கூறியுள்ளது. ஆக இப்படியாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தளர்த்தல் இருந்த போதிலும் வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வருகின்றன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here