கொரோனவால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய எனது இடத்தை தருகிறேன் – விஜயகாந்த் அறிவிப்பு

0

சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த வந்த 55 வயது நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கொரோனவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய தனது இடத்தை தருவதாக விஜயகாந்த் அறிவித்து உள்ளார்.

டாக்டரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை  வந்த 55 வயது நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டருக்கு கொரோனா இருந்தது.அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆவர்,இவர் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டாக்டர், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.ஏப்ரல் 19 நேற்று உடல்நிலை மோசமடைந்ததால் டாக்டர் உயிரிழந்தார். அண்ணா நகர் வேலங்காடு பகுதிக்கு டாக்டரின் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். கல்லறைத் தோட்டத்தில் ஏற்பாடுகள் நடந்தன. அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தெரிந்தது. உடனடியாக அவர்கள் கல்லறைத் தோட்டம் அமைந்துள்ள இடத்துக்கு வந்து, `இங்கு கொரோனா தொற்றால் இறந்த டாக்டரின் சடலத்தை அடக்கம் செய்யக் கூடாது’ என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், போராட்டம் நடத்தினர். சிலர் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் ஆம்புலன்சைய்யும் ஊழியர்களையும் தாக்கினர். இதில், ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைந்தது.

ஊழியர் காயமடைந்தார். இதனையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு டாக்டர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. போராட்டம் தொடர்பாக சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்து அவர்கள்  மீது வழக்கு பதியப்பட்டது.இதேபோல் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், கொரோனா தொற்றால் சென்னையில் உயிரிழந்தார். அவரின் சடலத்தையும் தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல, சென்னையில் தனியார் மருத்துவமனையை நடத்தி வந்த பிரபல டாக்டரின் சடலத்தை அடக்கம் செய்வதில் நடந்த வன்முறை சம்பவங்கள் மருத்துவத்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலியானால், அவர்களது உடல் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த வழிமுறைகளைப் பின்பற்றித்தான் அடக்கம் செய்யப்படும் என்றும் அதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்தது. சுகாதாரத்துறை அதிகாரிகளும் அதையேதான் தெரிவித்து வருகிறார்கள்.

மனிதநேயமுள்ள விஜயகாந்த்

இதை கேள்விப்பட்ட தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தாம் இடம் தருவதாக ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியில் உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த், “கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த உலகில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் ஒருநாள் நிச்சயமாக இறக்கத்தான் போகிறார்கள்.

இப்படி இருக்கும்போது மருத்துவத்துறையைத் தேர்தெடுத்து மக்களுக்குச் சேவை செய்த ஒரு மருத்துவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலையை நாம் எண்ணி பார்க்க வேண்டும்” என்றார்.,“ கால்நடைகள் இறந்தாலே அதை மனிதாபிமானத்தோடு அடக்கம் செய்து உரிய மரியாதை செலுத்தி வரும் தமிழக மக்கள், தற்போது மருத்துவரின் உடலை அடக்கம்செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. உடலை அடக்கம் செய்வதால் எந்தத் தொற்றும் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனமும் தமிழக அரசும் தெரிவித்துள்ளது. ஆனால், மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை அடிப்பதும், ஓட்டுநர் உட்பட மற்றவர்களைத் தாக்குவதும் கண்டனத்துக்குரியது.

கல்லூரி இடத்தை தருகிறேன்

மக்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு சிந்தித்து இது போன்ற செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்பதைத் தாழ்மையுடன் கேட்டுக்கோள்கிறேன்” என்றவர்மேலும் “உடலை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்களுக்குத் தமிழக அரசு புரிய வைக்க வேண்டும். கடவுளுக்கு அடுத்தபடியாக நாம் கருதுவது மருத்துவர்களைத்தான்.

ஆனால், மக்கள் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த நிலை என்பது மனதுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியில் உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.. மனிதநேய உணர்வுடன் அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை பலதரப்பினரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here