அரசு பணியிடங்களை இதன் மூலம் மட்டுமே நிரப்பனும்.,மாநில அமைச்சக பணியாளர் சங்கம் கோரிக்கை!!

0
அரசு பணியிடங்களை இதன் மூலம் மட்டுமே நிரப்பனும்.,மாநில அமைச்சக பணியாளர் சங்கம் கோரிக்கை!!
அரசு பணியிடங்களை இதன் மூலம் மட்டுமே நிரப்பனும்.,மாநில அமைச்சக பணியாளர் சங்கம் கோரிக்கை!!

மாநிலத்தில் உள்ள அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப, நேரடி ஆள் சேர்ப்பு முறை தேவையில்லை என, புதுவை மாநில அமைச்சக பணியாளர் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய கோரிக்கை :

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப, டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில, அரசால் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு சில மாநிலங்களில் உள்ள பதவிகளுக்கு, பதவி உயர்வு அடிப்படையில் காலி பணியிடம் நிரப்ப படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் புதுச்சேரியில், உள்ள உதவியாளர் நிலை பணியிடங்கள் பதவி உயர்வின் அடிப்படையில், நிரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மாநில அமைச்சக பணியாளர் சங்கத்தின் செயலாளர் ஆர். ராமகிருஷ்ணன், கடந்த 10 ஆண்டுகளாக, காலியாக உள்ள பணியிடங்களை அரசு இந்த முறையிலேயே நிரப்பி வருவதாகவும், ஒரு சில விஷமிகள் இது குறித்து தவறாக பதிவிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(10.11.2022) – முழு விவரம் உள்ளே!!

நேரடி ஆட்சேர்ப்பு முறை மூலம், இந்தப் பதவிக்கு ஊழியர்கள் நியமிக்கப்படுவது, அரசின் முடிவுக்கு எதிரானது என தெரிவித்தார். ஏனென்றால் இந்த பதவிக்கு, முன் அனுபவம் என்பது முக்கியம். இந்த அனுபவம் பதவி உயர்வு மூலம் வரும் ஊழியர்களுக்கு மட்டும்தான் கிடைக்குமே தவிர புதிய ஊழியர்கள் இதனை, பெற வாய்ப்பில்லை. அதுமட்டுமில்லாமல், நேரடி ஆட்சேர்ப்பு முறையால் பல உள்ளூர் வாசிகள் அரசு வேலை இழப்பதாகவும், அவர்களுக்கான வாய்ப்பையும் உறுதி செய்யத்தான் இந்த முறை பின்பற்றப் படுவதாகவும் விளக்கம் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here