கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப்பணி – வலுக்கும் கோரிக்கை!

0
கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப்பணி - வலுக்கும் கோரிக்கை!
கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப்பணி - வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களுக்கு அரசுப்பணி

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று பல உயிர்களை காவு வாங்கிய நிலையிலும் தன் உயிரை பொருட்படுத்தாமல் எக்கச்சக்க மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சேவையாற்றினர். இந்நிலையில், கொரோனா காலத்தில் குறைந்தபட்சமாக 100 நாட்கள் பொது மக்களுக்கு சேவையாற்றிய மருத்துவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என மத்திய அரசின் மருத்துவ துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது வரையிலும் மருத்துவர்களுக்கான நிரந்தர பணி தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில், கொரோனா காலத்தில் சேவையாற்றிய மருத்துவர்கள் தேர்வு எழுதி தங்களுக்கான பதவி உயர்விற்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த மருத்துவர்களுக்கு சிறந்த மதிப்பெண்கள் வழங்கி அரசு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

ரேஷன் கார்டுதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – உடனே இதை அப்டேட் செய்யுங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here