மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிப்பு – தெலுங்கானா மாநில அரசு அறிவிப்பு!

0
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிப்பு - தெலுங்கானா மாநில அரசு அறிவிப்பு!
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிப்பு - தெலுங்கானா மாநில அரசு அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலேயே அதிக ஓய்வூதியம் வழங்கும் மாநிலமாக தற்போது தெலுங்கானா உருவெடுத்துள்ளது.

ஓய்வூதியம்

தமிழக உட்பட அனைத்து மாநிலங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கென மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3016 இல் இருந்து ரூ.4016 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அறிவித்திருந்தார். மேலும், இந்த ஓய்வூதிய திட்டம் ஜூலை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தினால் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்து 11 ஆயிரத்து 656 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும், இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான கூடுதல் ஒய்வூதியம் திட்டத்தின் காரணமாக மாநிலத்திற்கு ஒவ்வொரு மாதமும் கூடுதலாக ரூபாய் 205.48 கோடி செலவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், தற்போது இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் மாநிலமாக தெலுங்கானா விளங்கி வருவதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப்பணி – வலுக்கும் கோரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here