‘இப்படி இருந்தா கொரோனா எப்படிங்க போகும்’ – மத்திய அரசு பகிர் குற்றச்சாட்டு!!

0

நாட்டில் மக்கள் அனைவரும் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது இல்லை என்று மத்திய அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. தற்போது அது குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ்:

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் கோரத்தாண்டாவத்தினால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இதுகுறித்து மத்திய அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி நாட்டில் யாரும் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை என்று தெரிவித்துள்ளது. 50% பேர் முகக்கவசம் அணிவது இல்லை என்று தெரிவித்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் 2 சதவிகித பேர் கழுத்தில் முக கவசத்தை அணிகிறார்கள் என்றும், 64 சதவிகித பேர் வாயை மட்டுமே முக கவசத்தினால் மூடுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 14% மக்கள் மட்டுமே முறையாக மாஸ்க் அணிகின்றனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல் மற்றும் தும்மல் மூலமாக வரும் நீர்த்துளியினால் 6 அடி தூரத்தில் இருப்பவர்களுக்கு கூட வைரஸ் பரவும் என்று தெரிவித்துள்ளது.

கொரோனாவினால் அதிக இளைஞர்களை இழக்கும் மாநிலம் !!!

face mask
face mask

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் ஏரோசால் எனப்படும் நுண்உமிழ் நீர்த்துளிகள் 30 அடி வரை சென்று மக்களை தாக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலமாகவே அதிக அளவில் வைரஸ் பரவுகிறது என்பதனால் மக்கள் அனைவரும் இரட்டை முகக்கவசம் அல்லது N-95 வகை மாஸ்கை கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here