பாரதி கண்ணம்மாவில் வெண்பாவும், லக்ஷ்மியும் செய்யும் அட்டகாசத்தை பாருங்க – வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடிக்கும் வெண்பாவும், கண்ணம்மாவின் மகளான லக்ஷ்மியும் இணைந்து செய்யும் அட்டகாசங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணாம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமாவையும், லக்ஷ்மியையும் வீட்டில் ஒன்றாக இணைத்து கேக் கட் செய்ய சொல்லி பிறந்த நாளை கொண்டாடுகிறார் பாரதி. இதனால் கோவமடையும் வெண்பா என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்படியும் கண்ணம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்து பிரச்சனை இழுக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார். இதனை அறிந்துகொள்ளும் கண்ணம்மா வெண்பா வீட்டு வேலைக்காரியை விளாசி விட்டார்.

இப்படி நாளுக்கு நாள் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வெண்பாவிற்கும், லட்சுமிக்கும் ஆகவே ஆகாது. எல்லா எபிசோடுகளிலும் சண்டை போட்டு கொண்டு தான் இருப்பர். ஆனால் நிஜ வாழ்க்கையில் இருவரும் அதிக நெருக்கம்.

வெண்பாவிற்கு லட்சுமி என்றால் மிகவும் இஷ்டமாம். எப்பொழுதுமே வெண்பா ரீல்ஸ் வீடியோ என்றால் அவருடன் தான் செய்வார். இப்படி இருக்க லக்ஷ்மியும், வெண்பாவும் இணைந்து செய்யும் சேட்டைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here