பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்!!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வரபோகும் புதிய திட்டம் - டெல்லி முதல்வர் முன்னிலையில் தொடக்க விழா!!

சென்னையில் 1 – 5 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் மதுரையிலும் செப்டம்பர் 15 ம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்:

தமிழ்நாட்டில் வாழும் பெரும்பாலான ஏழை எளிய குழந்தைகள் அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். மேலும் அக்குழந்தைகள் ஒரு வேளையாவது மன திருப்தியுடன் உணவு அருந்தட்டும் என்று கடந்த 1957ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் இலவச உணவு திட்டம் அறிமுகப்படுத்தினார். இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகமாகி கொண்டு வந்தது.

இதனை தொடர்ந்து மதிய உணவு திட்டத்தை எம்.ஜி.ஆரும் மற்றும் உணவுடன் சேர்த்து முட்டையும் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது அமல்படுத்தினார். தற்போது திமுக ஆட்சியைப் பிடித்து பள்ளிக்கல்வித்துறைக்கு பல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதில் ஒன்று தான் அரசு பள்ளியில் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம். முதல் கட்டமாக சென்னையில் ஆரம்பித்து தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையிலும் இந்த திட்டம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து வருகிற செப்டம்பர் 15ம் தேதி அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் இருக்கும் அரசு பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். இதனால் தொலைதூரத்தில் இருந்து பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு இந்த திட்டம் பெரிய பயனுள்ளதாக இருக்கும். மேலும் தமிழ்நாடு அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து கிட்டத்தட்ட 21 மாநகராட்சிகளில் இத்திட்டம் அமல்படுத்தபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து காலை சிற்றுண்டி உணவாக வெண் பொங்கல், உப்புமா, கிச்சடி போன்ற உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here