கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 2,500க்கும் மேற்பட்ட ஆப்ஸ் நீக்கம்., மோசடி கடன் செயலிகளா? மத்திய அமைச்சர் அறிவிப்பு!!!

0

இன்றைய நவீன யுகத்தில் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பெரும்பாலான செயல்கள் மொபைல் மூலமாக நடைபெற்று வருகிறது. இதற்கேற்றாற்போல் இணையவழி பண மோசடி செயல்களும் அதிகரித்து வருகிறது. எனவே மக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு ஒன்றை எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.

அதாவது “மக்களின் பாதுகாப்புக்காக கடன் மோசடியில் ஈடுபட்டு வந்த லோன் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2021 ஏப்ரல் முதல் 2022 ஜூலை வரையிலும் 2,500க்கும் மேற்பட்ட கடன் மோசடி செயலிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கடன் மோசடி செயலிகளை கண்காணிக்க RBI-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

கிரிக்கெட் வரலாற்றில் இன்று: டெஸ்டில் வரலாறு படைத்த சச்சின்.. முழு விவரம்  உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here