கிரிக்கெட் வரலாற்றில் இன்று: டெஸ்டில் வரலாறு படைத்த சச்சின்.. முழு விவரம்  உள்ளே!!

0
கிரிக்கெட் வரலாற்றில் இன்று: டெஸ்டில் வரலாறு படைத்த சச்சின்.. முழு விவரம்  உள்ளே!!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் 13 ஆண்டுகளுக்கு (2010) முன்பு இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் நட்சித்திர வீரர்  சச்சின் டெண்டுல்கர் 241 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உட்பட (111* ரன்கள்) சதம் அடித்தார்.

இது அவரின் 50வது டெஸ்ட் சதம் என்பது சிறப்பிற்குரியது. சச்சின் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களும், டெஸ்டில் 51 சதங்களும் குவித்துள்ளார். மொத்தமாக 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இத்தினத்தை ரசிகர்கள் நினைவு கூர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

ரூ.6,000 நிவாரண தொகை: டோக்கன் கிடைக்கவில்லையா? இதுதான் காரணம்? வெளியான தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here