விவசாயிகள் நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் தள்ளுபடி – முதல்வர் அதிரடி!!

0

ஏற்கனவே விவசாயிகள் வாங்கிய பயிர்கடனை ரத்து செய்ததை தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் விவசாயிகள் வாங்கிய நகைக்கடனையும் ரத்து செய்துள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகள்:

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மக்களுக்கு பயன் பெறும் வகையில் பல திட்டங்களை அறிவித்து வருகிறார். அதில் குறிப்பாக விவசாயிகள் பயன்படும் வகையில் பல கவரும் திட்டங்களை அறிவித்து வருகிறார். இதனால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் அனைத்தையும் தமிழக அரசு ரத்து செய்தது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றொரு அறிவிப்பையும் அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தற்போது தள்ளுபடி செய்யப்போவதாக அறிவித்தார். மேலும் அதில் 6 சவரன் வரையிலான நகைக்கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் – தலைவர்கள் இரங்கல்!!

இதனை தொடர்ந்து கூட்டுறவு வங்கியில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் பெறும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பயன்பெறும். இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110வது விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here