இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் – தலைவர்கள் இரங்கல்!!

0

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார். இதனையடுத்து தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தா.பாண்டியன்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக திகழ்பவர் தா.பாண்டியன். இவர் உசிலம்பட்டியில் கடந்த 1932ம் ஆண்டு பிறந்தார். இவர் மொழிபெயர்ப்பதில் வல்லவர். இவர் இதுவரை பலரது பேச்சுக்களை பொழி பெயர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி பேச்சுக்களையும் பொழி பெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இவர் கட்டுரைகள் மற்றும் பல நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்களில் மேடை பேச்சு மற்றும் பொதுவுடையரின் வருங்காலம் ஆகிய நூல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவர் கடந்த 1989 முதல் 1996 வரை வட சென்னை எம்.பி.,யாக இரண்டு முறை பதவியில் திகழ்ந்தார். மேலும் கடந்த 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக திகழ்ந்தார்.

ஏப்.1 முதல் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் – தமிழக முதல்வர் அதிரடி!!

இவருக்கு சிறுநீரக பிரச்னை, ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவரது உடல் நலத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இவர் சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு 88 வயது. இதனை தொடர்ந்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது சிகிச்சை பலனின்றி தா.பாண்டியன் காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here