கண் திருஷ்டியை முழுமையாக நீக்க வேண்டுமா?? இதோ எளிய முறையில் ஆன்மீக பரிகாரம்!!

0

நம் முன்னோர்கள் நாம் நலமாக வாழ்வதற்கு நிறைய வாழ்க்கை விதிமுறைகளை சொல்லி இருக்கிறார்கள். “கல்அடி பட்டாலும் கண்அடி படகூடாது” என்று கூறுவார்கள். அதாவது கீழே விழுந்து அடிபட்டாலோ அல்லது உடல்நிலை சரி இல்லாமாலோ போனால் கூட சில நாட்களில் சரியாகிவிடும். ஆனால், ஒருவர் நம்ம பார்த்து எப்படி இருக்கிறார் இவருக்கு என்ன!! எந்த குறையும் இல்லாமல் நன்றாக இருக்கிறார் என்று சொன்னாலே போதும், அவரின் நிலை அதோ கதிதான். இதனால் தான் நாம் வெளியில் செல்லும் பொழுது நெற்றியில் திருநீர் அணிவது, சந்தனம், குங்குமம், மஞ்சள் வைத்தால் திருஷ்டி படாது என்று கூறப்படுகிறது. கண் திருஷ்டியை போக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கண் திருஷ்டி நீக்க:

பிறந்த குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணி இலை சாற்றால் தயார் செய்த கண் மைகளை முகம், கை, பாதம் போன்ற இடங்களில் வைக்க வேண்டும். ஏன் என்றால் குழந்தையை பெற்ற அம்மாக்களே என் குழந்தையை பார் சிரிக்கிறான், பேசுறான் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதனால் கண் மைகளை வைத்தால் கண் திருஷ்டி படாமல் இருக்கும்.

 

ஐந்து வயது மேற்பட்டவர்களுக்கு கல் உப்பை எடுத்து தலையை மூன்று முறை சுற்றி நீர் போகும் இடங்களில் போட்டு விடவேண்டும். பெரியவர்கள் தன்னைத் தானே சுற்றிக்கொல்லாம். குளிக்க செல்லும் முன் ஒரு கைப்பிடி கல் உப்பை எடுத்து குளிக்க போகும் நீரில் போட்டு விட்டு கரைந்த பின் குளிக்கலாம்.

வீடுகளில் கண் திருஷ்டியை நீக்க:

வீடுகளில் உள்ள கண் திருஷ்டியை நீக்க வீட்டின் முன் புறம் கண்ணாடி வைப்பது, விநாயகர் படம், பூசணிக்காய் தொங்கவிடுவது நல்லது. எலுமிச்சை,மிளகாய் ,கரிக்கட்டை ஆகியவற்றை கட்டி வீட்டிற்கு வருபவர்கள் பார்வையில் படும்படி கட்டிவிட வேண்டும். ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி ஒரு எலும்பிச்சை பழத்தை அதில் போட்டு வைக்க வேண்டும். தினமும் தண்ணீரை மாற்றி விட வேண்டும். மேலும், ஒரு தட்டில் கல் உப்பு முழுமையாக நிரப்பி அதன்மேல் ஒரு எலும்பிச்சை பழத்தை பாதியாக அறுத்து ஒரு பக்கம் மஞ்சளும், மற்றொரு பக்கம் குங்குமம் தடவி வைக்க வேண்டும்.

வீடுகளில் அடிக்கடி பிரச்சனை இரத்த காயம் ஏற்பட்டால் வெண்கடுகு மற்றும் உப்பு ஆகியவற்றை கலந்து ஒரு இடம்கூட விடாமல் வீடு முழுவதும் இரவில் பரப்ப வேண்டும். மறுநாள் காலையில் சுத்தமாக வீட்டை சுத்தமாக கழுவ வேண்டும். வீட்டில் அடிக்கடி பிரச்சனை, உடம்பில் சோர்வு, இரத்த காயம் போன்றவை ஏற்படுகிறதே என்று கவலை படுபவர்கள் இதை செய்தால் முற்றிலுமாக தீர்வு கிடைக்கும்.

வியாபாரத்தில் கண் திருஷ்டியை நீக்க:

கடைகளின் முன் கற்பூர விநாயகர் படத்தை வைக்க வேண்டும். அம்மாவாசை அன்று கடைகளின் முன் வெள்ளை பூசணிக்காய் வாங்கி மேலே சிறிய ஓட்டை போட்டு அதனுள் சில்லறை காசு மற்றும் குங்குமம் சேர்த்து கடையை மூன்று முறை சுற்றி உடைக்க வேண்டும். கடல் நீரில் மஞ்சள் சேர்த்து கடைகளின் முன் தினமும் காலை தெளிக்க வேண்டும் (கடல் நீர் கிடைக்க வில்லை என்றால் தண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள் சேர்க்கலாம்). ஏன்னேறால், மற்ற வியாபாரிகள் நம் கடைகளை பார்த்து கூட்டத்தை பார் எவ்வளவு வருமானம் வருமோ என்று கூறுவார்கள்.

அந்த பார்வை இவ்வாறு செய்தால் மாறிவிடும். தினமும் மலையில் கடைகளை மூடும் பொழுது கற்பூரம் சுற்றி பொறுத்த வேண்டும். ஓலை கொட்டான் என்று சொல்லப்படும் ஓலை பெட்டியில் அல்லது அட்டைப்பெட்டியில் சிறுது கடுகு,உப்பு, காய்ந்த மிளகாய், கற்பூரம், முச்சந்தி மண் (மூன்று பாதை சந்திக்கும் இடம்) ஆகியவற்றை பெட்டியில் போட்டு நன்றாக சுத்தி எரிக்க வேண்டும். வீடுகளிலும். மேலே, சொன்னவாறு சரியாக செய்தால் கண் திருஷ்டியில் இருந்து முழுமையாக விடுபட்டு நலமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here