பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 கிடைக்கும்.., யார் யார் விண்ணப்பிக்கலாம்?? முழு விவரம் இதோ!!

0
மத்திய மற்றும் மாநில அரசு பெண் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெண்களுக்கான பாக்கிய லக்ஷ்மி யோஜனா திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது.
ஆனால் இதற்கு விண்ணப்பிக்க யார் யார் தகுதியுடையவர்கள் என்று பார்த்தால் உத்திரபிரதேச மாநிலத்தின் நிரந்தர குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் பிபிஎல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் குழந்தை பிறக்கும் போது ரூ.50,000 வழங்கப்படுகிறது. ஆனால் இந்த பணத்தை குழந்தைகளின் 18 வயதிற்குள் எடுக்கக்கூடாது. மேலும் 21 வயது வரை இந்த பணத்தை எடுக்காமல் இருந்தால் 2 லட்சம் ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here