தோனியின் சாதனையை நிகழ்த்த போவது யார்?? சவால் விடும் முன்னாள் வீரர்!!

0
தோனியின் சாதனையை நிகழ்த்த போவது யார்?? சவால் விடும் முன்னாள் வீரர்!!
தோனியின் சாதனையை நிகழ்த்த போவது யார்?? சவால் விடும் முன்னாள் வீரர்!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சாதனையை எந்த ஒரு வீரராலும் நிகழ்த்தி காட்டுவது என்பது முடியாத ஒன்று என கம்பீர் கூறியுள்ளார்.

கவுதம் கம்பீர்:

இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த நிலையில், அரையிறுதியில் மோசமான தோல்வியை சந்தித்து ஏமாற்றியது. இதனால், இந்திய அணியின் கேப்டன், பயிற்சியாளர் உள்ளிட்ட அனைவரின் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

T20WC.., தோல்வி அடைந்த இந்திய அணிகே இத்தனை கோடியா?? வெளியாகிய ஷாக் ரிப்போர்ட்!!

இதனை தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீரும் தன் பங்கிற்குக்கு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், பல்வேறு கேப்டன்கள் இந்திய அணியை வழி நடத்தினாலும், தோனியின் சாதனைகளை எவராலும் நிகழ்த்த முடியாது என்று கூறியுள்ளார். அதாவது, கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தோனி தலைமையிலான இந்திய அணி, டி20 உலக கோப்பை (2007), ஒருநாள் (2011) உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஷிப் டிராபி(2013) என 3 ஐசிசி கோப்பைகளை வென்றிருந்தது என்பதை கம்பீர் குறிப்பிட்டு கூறியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி இவர்களின் சாதனைகளை எந்த ஒரு வீரரும் எளிதில் முறியடித்து விடுவார்கள். ஆனால், இந்திய கேப்டனான தோனியின் சாதனையை நிகழ்த்தி காட்டுவது என்பது முடியாத ஒன்று என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here