‘கொரோனாவின் இரண்டாவது அலை மே மாதத்திற்கு மேல் குறையும்’ – ககன்தீப் காங் தகவல்!!

0

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் பேராசிரியர் ஆன ககன்தீப் காங், இந்தியாவில் தற்போது நிலவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மே மாத இறுதியில் படி படியாக குறையும் என தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் 2-ஆவது அலை முடிவடைகிறது

வைராலஜிஸ்ட் ககன்தீப் காங், இவர் மேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிர் பேராசிரியராக பணிபுரிகிறார் . மேலும் ஆந்திர மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் அரசு கொரோனா தொற்று தடுப்பு ஆலோசகராகவும் பதவி வகிக்கிறார். இவர் தற்போது வெளியிற்றுள்ள அறிக்கையில் “இந்தியாவில் தற்போது நிலவிவரும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மே மாதம் மத்தியிலோ அல்லது இறுதியிலோ குறையத்தொடங்கும்” என கணித்துள்ளார்.

மேலும், சில ஆராச்சியாளர்கள் ஜூன் மாதம் தொடக்கத்தில் தான் பாதிப்பு குறைய தொடங்கும் என கூறியுள்ளனர். ககன்தீப் காங், சில ஆதாரங்களின் அடிப்படைகளை வைத்து தங்கள் கணித்துள்ள கோட்பாட்டின் மூலம் மே மாதத்தின் நடு பகுதியிலோ அல்லது இறுதியிலோ கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கும் என அறிவித்துள்ளனர்.

கமல் பட நடிகைக்கு கொரோனாவா?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இந்தியாவில் போடப்பட்டு வரும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் ஆகிய இரு தடுப்பூடுகளும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவாகவும் கூறி உள்ளார். மக்கள் நோய் தொற்றில் இருந்து தங்களை தாங்களே காத்து கொண்டால் மட்டுமே, உங்களால் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் காத்து கொள்ள முடியும் என கூறியிள்ளார். தற்போது நிலவிவரும் கொரோனாவின் இரண்டாவது ஆலையில் ஏறக்கொறைய 4 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தசூழலை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு ஓர் சிறந்த கருவியாக இருக்கும் என ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here