தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.4000??முழு ஊரடங்கு எதிரொலி!!

1
குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு -  ரேஷன் கடைகளில் அமலாகும் புது மாற்றம்! அரசு புதிய அறிவிப்பு!!
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷாக் - இன்னும் 5 நாட்கள் தான் கெடு! இல்லைன்னா ரேஷன் கார்டு ரத்து!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தகவல் தொடர்ந்து வெளிவந்த நிலையில் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொண்டால் குடும்ப அட்டை தாரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப அட்டை தாரர்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றினால் ஏற்பட்ட பொதுமுடக்கம் காரணமாக பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். மேலும் சிலர் தங்களது வேலையை இழந்து அன்றாட உணவிற்கு தவித்து வந்தனர். இதனால் கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் பொழுது தமிழக குடும்ப அட்டை தாரர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ.5000 நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக ஸ்டாலின் பதவி ஏற்ற பின்பு ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

கொரோனாவின் 3வது அலையை கட்டுப்படுத்த தயாராகுங்கள் – மத்திய, மாநில அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.4000 நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்போது இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 COMMENT

  1. இரண்டு தவணையாகக் கொடுக்கலாம். சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மக்களிடம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். இடையில் மாதம் ஒருமுறை முக கவசம், கபசுர குடிநீருக்கான சூரணம் வழங்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here