மே 8 முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு – முதல்வர் அதிரடி!!

0

நாளுக்கு நாள் கொரோனா நோய்பரவல் புதிய உச்சத்தை அடைந்து வருவதால் இதனை தடுப்பதற்காக தற்போது கேரள மாநிலத்தில் வருகிற மே மாதம் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று மாநில முதல்வர் அறிவித்தார்.

முழு ஊரடங்கு:

இந்தியாவில் கடந்த 10 நாட்களாக 3 லட்சத்தை தாண்டி வந்த கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 4 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் தற்போது 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கேரளா மாநிலத்தில் அதிகமான அளவில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் தற்போது நிலைமை மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 41,953 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 58 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இதனை தடுக்கும் வகையில் கேரளா மாநிலத்தில் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் மக்கள்!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனை அந்த மாநிலத்தின் முதல்வர் பிரனாயி விஜயன் அறிவித்தார். அதன்படி கேரளாவில் வருகிற மே மாதம் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். மேலும் இந்த முழு ஊரடங்கில் மக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அத்தியாவசிய தேவையான பால், காய்கறி, மருந்தகம் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here