தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு !!!

0

தமிழகத்தில் வருகிற திங்கள் கிழமை உடன் ஊரடங்கு நடவடிக்கை முடிவுக்கு வரவுள்ள நிலையில் தற்போது இதனை ஒரு வாரம் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்நிலையில் இந்த ஊரடங்கு நாளை மறுநாள் காலை 4 மணி உடன் முடிவுக்கு வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். தற்போது இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

புதிய ஊரடங்கு நடவடிக்கை மற்றும் தளர்வுகள்:

  • தமிழகத்தில் 24ம் தேதி முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு நீட்டிப்பு.
  • இன்றும் நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் இயங்கும்.
  • உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.
  • வேளாண்பொருட்களுக்கு தடைகள் கிடையாது.
  • வெளியூர் செல்பவர்கள் நலன் கருதி இன்றும் நாளையும் அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்கும்.
  • மருத்துவ தேவைக்காக மாவட்டத்திற்குள் செல்ல இ-பதிவு தேவையில்லை. ஆனால் மாவட்டத்திற்கு வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம்.
  • பெட்ரோல் டீசல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும்.
  • ஏடிஎம் சேவை வழக்கம் போல் செயல்படும்.
  • அத்தியாவசிய சரக்கு வாகனங்கள் இயங்க அனுமதி.
  • காய்கறி, பழங்கள் போன்றவற்றை வண்டிகளில் வைத்து விற்பனை செய்ய ஏற்பாடு.
  • ஒரு வாரத்திற்கும் காய்கறி, பழங்கள் கடைகள் செயல்படாது.
  • அத்தியாவசிய அரசு துறைகள் மட்டும் இயங்க அனுமதி.
  • தனியார் நிறுவனங்கள் அனைத்தும் வீட்டில் பணி புரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here