ஜூன் 1 லிருந்து ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்படும் – முதலமைச்சர்!!!

0
A man walks a deserted road in New Delhi. Indian Prime Minister Narendra Modi asked Tuesday that residents across the country stay where they are in order to help stem the spread of the coronavirus and the deadly disease it can cause, COVID-19.

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஜூன் 1 முதல் அம்மாநிலத்தில் தளர்வுகள் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது வெவ்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்படும்  என்றும் இது தொடர்பான வழிகாட்டுதல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மத்திய பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5000 க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. நேற்று மட்டும் இந்நோய்க்கு 4,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  79 இறப்புகளும் பதிவாகியுள்ளன. அதே சமயம் இத்தொற்றிலிருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை நோய் பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாவே உள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், மத்திய பிரதேச அரசு ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here