ஜூன் 15 முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு..! வெளியான செய்தி உண்மையா..?

0
India lockdown
India lockdown

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வைரலாக பரவியது. இந்த தகவல் குறித்த உண்மைத்தன்மை தற்போது வெளியாகி உள்ளது.

முழு ஊரடங்கு:

இந்தியாவில் தற்போது அன்லாக் 1.0 எனும் பெயரில் 5ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் ஒவ்வொரு ஊரடங்கின் பொழுதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை போன்று இந்த முறையும் அதிகளவு தளர்வுகள் வழங்கப்பட்டது. கோவில்கள் மற்றும் மால்கள் கூட திறக்கப்பட்டு விட்டன. இதனால் மக்கள் வழக்கம் போல வெளியில் நடமாடத் தொடங்கி விட்டனர். பலரும் முகக்கவசம் இன்றி வெளியில் சுற்றுவதால் எளிதில் நோய் பரவும் அபாயம் இருக்கிறது.

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது என செய்திகள் பரவியது. வட இந்திய ஹிந்தி செய்தி நிறுவனத்தின் பெயருடன் ஒரு தலைப்பு செய்தி புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. இது வைரலான காரணத்தால் மத்திய அரசு கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து இது பொய்யான செய்தி என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ஒரே நாளில் 357 பேர் பலி – இந்தியாவில் 8 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா உயிரிழப்புகள்..!

சமூக விரோதிகள் சிலர் இதை பரப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெளியுறவு அமைச்சகம் இது குறித்து விளக்கம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here