இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி..!

0
supreme court
supreme court

மருத்துவப் படிப்பில் சேருவதற்கு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது என நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

இட ஒதுக்கீடு:

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க பரிசீலிக்குமாறு ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஜூன் 15 முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு..! வெளியான செய்தி உண்மையா..?

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள், இட ஒதுக்கீடை அரசு முறையாக பின்பற்றுவதில்லை. இது மாணவர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக உள்ளது என தெரிவித்தார். இதற்கு கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இட ஒதுக்கீடு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை கிடையாது என தெரிவித்து உள்ளனர். வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here