ஒரே நாளில் 357 பேர் பலி – இந்தியாவில் 8 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா உயிரிழப்புகள்..!

0
Corona death
Corona death

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 357 பேர் உயிரிழந்து உள்ளனர். தினமும் கொரோனா வைரஸின் தாக்கம் புதிய உச்சத்தை எட்டி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் ஆரம்ப காலத்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் பொதுவெளியில் அச்சமின்றி நடமாட தொடங்கி இருப்பதால் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் நாளுக்குநாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 9,996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 357 பேர் உயிரிழந்து உள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இதனால் இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,86,579 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 8102 (2.8%) ஆக உயர்ந்து உள்ளது. நேற்று மட்டும் 5,823 பேர் குணமடைந்து உள்ளதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,41,029 ஆக உள்ளது.

ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய வழக்கு – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 94,091 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 36,841 பேரும், டெல்லியில் 32,810 பேரும், குஜராத்தில் 25,521 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here