ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய வழக்கு – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

0
online classes
online classes

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டனர். தற்போது பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டுள்ளன.

ஆன்லைன் வகுப்புகள்

கொரோனா காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே நடத்தப்படும் வகுப்புகள் ஒரு விதத்தில் வசதியாக இருந்தாலும், மறுபுறம் மாணவர்களின் மொபைல்ஃபோனில் ஆபாச இணையதளங்கள் தன்னிச்சையாக வருவது பெற்றோருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் தாய். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

online-class
online-class

அவர் தமது மனுவில், ” ஆன் -லைனில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கும்போதே, தமது பிள்ளையின் மொபைல்ஃபோனில் இணையதளங்கள் தன்னிச்சையாக (பாப்- அப்) வருகின்றன. மேலும் இந்த முறையிலான வகுப்புகள் நடைபெறுவத தொடர்ந்தால், அது ஏழை, பணக்கார மாணவர்களுக்கு இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தும். எனவே, ஆன் -லைன் வகுப்புகளுக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

மனு விசாரணை

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தற்போது பல்வேறு பணிகள் ஆன் -லைன் முறையில் நடைபெறுவதால், இணைய வழி கல்விக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர்.

court judgement
court judgement

அதேசமயம், ஆன் -லைன் வகுப்புகளை முறைப்படுத்த திட்டம் ஏதேனும் உள்ளதா என அரசுகளுக்கு கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here