கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகரிக்கும் குணமானவர்களின் எண்ணிக்கை..!

0
corona cured peoples
corona cured peoples

உலகையே அச்சுறுத்தும் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வந்துள்ள நிலையில் இன்று முதல் முறையாக கொரோனவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கொரோனா பரவல்

கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவியது. இந்தியாவையும் இந்த தொற்று தாக்கியது. நாளுக்குநாள் உச்சநிலையை அடைந்த இந்த தொற்று குறைவதற்கான எந்த அறிகுறியும் தெரியாத நிலையில் இருந்து வந்தது. இதனால் கொரோனா பாதிப்பில் நம் நாடு ஆறாவது இடத்தில இருந்து வந்தது. இன்று காலை மட்டும் நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,583 ஆக இருந்து வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,985 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona cases
corona cases

தொடர்ந்து 8-வது நாளாக கொரோனா தொற்று 9 ஆயிரத்துக்கும் மேல் பதிவாயுள்ளது. தொற்று நோய் தொடங்கிய காலத்திலிருந்து இதுவரை 7,745 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 279 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 50 லட்சம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, தொற்று பாதிப்பில் உலகளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக ஆறாவது இடத்தில் நாம் உள்ளோம்.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

இந்த நிலையில் நம்பிக்கை தரும் வகையில் மருத்துவர்கள் ஒரு செய்தியினை வெளி இட்டனர். அது என்னவென்றால் இந்தியாவில் கொரோனா பதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை பாதிக்கப்பட்டோர் எண்ணிகையை விட கூடுதல் ஆக இருப்பதே ஆகும்.

இதுவரை 1,35,206 நோயாளிகள் குணம் அடைந்து நலமுடன் வீடு திரும்பி உள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் வரும் நாட்களில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை கூடும் என்று எதிர்பார்ப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here