பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் 2022: BWF உலக டூர் பட்டத்தை வென்று இந்திய ஜோடி அபாரம்!!

0
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் 2022: BWF உலக டூர் பட்டத்தை வென்று இந்திய ஜோடி அபாரம்!!
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் 2022: BWF உலக டூர் பட்டத்தை வென்று இந்திய ஜோடி அபாரம்!!

பிரெஞ்சு ஓபனில் சீன வீரர்களை எதிர்த்து விளையாடிய இந்திய ஜோடி வெற்றி பெற்று BWF உலக டூர் பட்டத்தை வென்றுள்ளது. இது போல, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சங்கர் முத்து சாமி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

BWF பேட்மிண்டன்:

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த 25ம் தேதி முதல் பாரிசில் நடைபெற்று வந்தது. இந்த தொடரில், இந்தியா, சீனா, தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்திய வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆடவர் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த இறுதிப் போட்டியில் சீனாவின் தைபேயின் லு சிங் யாவ் மற்றும் யாங் போ ஹான் எதிர்த்து போட்டியிட்டனர். இந்த போட்டியில் ஆரம்ப முதல் ஆதிக்கம் செலுத்திய, இந்திய ஜோடி 21-13, 21-19 என தொடர்ந்து இரண்டு செட்களை கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய ஜோடி BWF உலக டூர் பட்டத்தை தட்டி சென்றது.

IND vs SA: தோல்விக்கு இது தான் காரணம்…, விளக்கம் அளித்த ரோஹித்! மனதார ஏற்ற முன்னணி வீரர்!!

இது போன்ற ஜூனியர் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பின், ஒற்றையர் பிரிவில் சீன வீரர் குவோ குவான் லின்னை இந்தியாவின் சங்கர் முத்துசாமி இறுதி போட்டியில் எதிர்கொண்டார். இந்த போட்டியில், 14-21, 20-22 என்ற செட் கணக்கில் சீன வீரரிடம் சங்கர் முத்து சாமி வீழ்ந்தார். இதன் மூலம், இந்தியாவின் சங்கர் முத்து சாமி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here