என்னடா சொல்றீங்க, மளிகை பொருள் வாங்குனா வலிமை டிக்கெட் Free-ஆ – திரண்ட ரசிகர் கூட்டம்!!

0
என்னடா சொல்றீங்க, மளிகை பொருள் வாங்குனா வலிமை டிக்கெட் Free-ஆ - திரண்ட ரசிகர் கூட்டம்!!

வலிமை டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் பலரும் திண்டாடி வரும் நிலையில் ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மளிகை பொருள் வாங்கினால் வலிமை டிக்கெட் இலவசமாக கொடுப்பதாக விளம்பரப்படுத்தி உள்ளது.

வலிமை டிக்கெட்:

எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ”வலிமை” திரைப்படம் வரும் வியாழக்கிழமை (24-02-2022) அன்று திரையரங்களில் வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த திரைப்படத்திக்கான டிக்கெட் புக்கிங் கடந்த ஞாயிற்றுகிழமையில் இருந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

டிக்கெட் புக்கிங் ஆரம்பமான சில மணி நேரத்திலேயே பல தியேட்டர்களில் முதல் மூன்று நாட்களுக்கான காட்சிகள் அனைத்தும் புக்காகி விட்டது. பலரும் வலிமை திரைப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசின் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி (SIMCO) மையத்தில் ரூ. 2999-க்கு மேல் மளிகை பொருள் வாங்குபவருக்கு ரூ. 500 மதிப்புள்ள வலிமை டிக்கெட் இலவசம் என ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டுடன் இணைத்து பாப்கார்ன் மற்றும் குளிர்பானமும் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த போஸ்ட்டரை பார்த்துவிட்டு ரசிகர்கள் அந்த மளிகை கடைக்கு திரண்டுள்ளனர். தற்போது அந்த போஸ்டர் சமுக வலைப்பக்கங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here