மக்களே அலர்ட்.., ஆன்லைன் மூலம் நூதனமான முறையில் பண மோசடி.., காவல்துறை எச்சரிக்கை!!

0
மக்களே அலர்ட்.., ஆன்லைன் மூலம் நூதனமான முறையில் பண மோசடி.., காவல்துறை எச்சரிக்கை!!
மக்களே அலர்ட்.., ஆன்லைன் மூலம் நூதனமான முறையில் பண மோசடி.., காவல்துறை எச்சரிக்கை!!

கோவை மாவட்டத்தில் புதிதாக நூதன முறையில் மக்களை ஏமாற்றி வருவதால், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

பென்சில் பண மோசடி:

தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் நூதனமான முறையில் பல பண மோசடி நடந்த வண்ணம் இருக்கிறது. இந்த லிங்கை தொடுங்கள் கோடீஸ்வரன் ஆகலாம், 1000 செலவழித்தால் 10000 பெறலாம் என பல தவறான தகவலை அறிந்து மக்கள் ஏமாந்து வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் புதிதாக ஒரு பண மோசடி அரங்கேறியுள்ளது. அதாவது வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று சில தகவல்களை இணையதளம் மூலம் பரப்பி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் 10-10 பென்சில் பேக்கிங் செய்து தர வேண்டும். அதற்கு முன் பணமாக பத்தாயிரம் வழங்கப்படும். அதுமட்டுமின்றி மாதம் 30 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. 30 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு மக்கள் தொடர்பு கொண்ட போது, முன்பணம் 600 ரூபாய் கட்ட வேண்டும் என்று அந்த மர்ம நபர்கள் தெரிவித்துள்ளனர்.

ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு., அதுக்கு இதை உடனே முடிங்க! அரசு உத்தரவு!!

குறைந்த பணத்தை தானே கட்டுகிறோம் என்று ஏராளமான மக்கள் பணத்தை கட்டியுள்ளனர். அவர்கள் கட்டிய பிறகு நம்பரை பிளாக் செய்து விடுகின்றனர். இதனால் ஏராளமான மக்கள் ஏமார்ந்துள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் இது போன்ற தகவல்களை சமூக வலைத்தளங்களில் பார்த்தால், நம்ப வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here