இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பி டி உஷா தேர்வு…, பல பதக்கங்களை குவித்தவருக்கு கிடைத்த அங்கீகாரம்!!

0
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பி டி உஷா தேர்வு..., பல பதக்கங்களை குவித்தவருக்கு கிடைத்த அங்கீகாரம்!!
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பி டி உஷா தேர்வு..., பல பதக்கங்களை குவித்தவருக்கு கிடைத்த அங்கீகாரம்!!

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக, வேகப்புயல் பி டி உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கம்:

இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில், போட்டியிடுவதற்கு ஓட்டப் பந்தயத்தில் பல சாதனைகளை படைத்திருந்த பி டி உஷா தாக்கல் செய்திருந்தார். டிசம்பர் 10ம் தேதி இந்த பதவிக்கான தேர்தல் நடைபெற இருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால், வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், போட்டியின்றி வேகப்புயல் பி டி உஷா இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்ற பெருமையும் பி டி உஷா அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் கருத்துக்கு பதில் அளித்த இந்திய வீரர்…, என்ன சொன்னார் தெரியுமா??

இவர் இந்தியாவுக்காக, 1983 ஆம் ஆண்டில் இருந்து, 1998 ஆண்டு வரையில், 400மீ, 100மீ, 200மீ மற்றும் தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் மட்டும் 14 தங்கப் பதக்கங்களை குவித்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும், பல பதக்கங்களை ஆசிய போட்டிகளில் வென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here