ஆன்லைன் விளையாட்டுக்கு தடை காலாவதி.., ஆளுநர் எடுக்கப்போகும் முடிவு என்ன??

0
ஆன்லைன் விளையாட்டுக்கு தடை காலாவதி.., ஆளுநர் எடுக்கப்போகும் முடிவு என்ன??
ஆன்லைன் விளையாட்டுக்கு தடை காலாவதி.., ஆளுநர் எடுக்கப்போகும் முடிவு என்ன??

ஆன்லைன் சூதாட்ட ஆப்களின் மூலம் மக்கள் தங்களது பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த மோசடியால் இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர். இதுபோன்ற சூதாட்ட ஆப்களை அ.தி.மு.க. ஆட்சியின் போது அவசர தடை சட்டம் மூலம் தடை செய்து, பின்பு நிரந்தர தடை சட்டத்தை அமல்படுத்தாமல் என தீர்மானிக்கப்பட்டது. அதன் படி சூதாட்ட ஆப்களை தடை செய்ய செப்டம்பர் 26ல் நடந்த சட்டப்பேரவை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட்டு அக்டோபர் 1ம் தேதி முதல் அவசர தடை சட்டம் அமலுக்கு வந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதைத்தொடர்ந்து நிரந்தர சட்டமாக்க சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அக்டோபர் 19ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து ஆளுநர் ஒப்புதலுக்காக அக்டோபர் 28ம் தேதி அனுப்பப்பட்டது. ஆனாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதா நிறைவேற்றுவதற்கு இதுவரை கையெழுத்திடவில்லை, அதற்கான காரணத்தையும் குறிப்பிடவில்லை.

வெர்ஷன் 2.0 அல்டிமேட் திட்டம்., பகீர் கிளப்பும் எலான் மஸ்க்! என்ன பிளான் தெரியுமா?

இந்நேரத்தில் அவசர சட்ட நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்து விட்டது. இதைப்பற்றி சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறுகையில் தாமதத்திற்கான காரணத்தை ஆளுநரை நேரில் சந்தித்து கேட்க உள்ளதாகவும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை தெளிவுபடுத்தி விரைவில் சட்ட மசோதாவை நிரந்தரமாக அமல்படுத்துவோம் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here