பிக்பாஸ் 6 : தலைவரையே சீண்டுறீங்களா.,சிக்குனா வெளியே போற முதல் ஆள் நீங்க தான்! ரசிகர்கள் சபதம்!!

0
பிக்பாஸ் 6 : தலைவரையே சீண்டுறீங்களா.,சிக்குனா வெளியே போற முதல் ஆள் நீங்க தான்! ரசிகர்கள் சபதம்!!
பிக்பாஸ் 6 : தலைவரையே சீண்டுறீங்களா.,சிக்குனா வெளியே போற முதல் ஆள் நீங்க தான்! ரசிகர்கள் சபதம்!!

விஜய் டிவியில் கடந்த ஞாயிற்று கிழமை முதல் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ்6ல் வீட்டை விட்டு முதல் ஆளாக வெளியேற போவது யார் என்ற சலசலப்பு தற்போது துவங்கியுள்ளது

பிக்பாஸ் சீசன் 6:

விஜய் டிவி-யில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 100 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் அனைத்து கடினமான தருணங்களையும் கடந்து இறுதிவரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவரே டைட்டில் வின்னராவார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் இந்த சீசனில் கிட்டத்தட்ட 20க்கு மேல் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் யார் டைட்டில் வின்னர்? ஆக போகிறார்கள் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு முதல் ஆளாக வெளியேற போவது யார் என்று சலசலப்பு துவங்கிவிட்டது. இந்நிலையில், அடுத்த வாரம் நாமினேஷனில், ஆயிஷா, விக்ரமன், அசீம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அட பாவிகளா வாழ்த்து சொன்னது குத்தமா? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கார்த்தி! யார வச்சுன்னு தெரியுமா?

ஆனால் முதல் ஆளாக தனலட்சுமி தான் வெளியேறுவார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதற்கு காரணம் வேறொன்றும் இல்லை, ஜி பி முத்துவை பார்த்தாலே காண்டாகுது என தனலட்சுமி நேற்று பேசியுள்ளார். இதனால் அவர் மீது ஜிபி முத்து ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். மேலும் வெளியேறும் நாமினேஷனில் அவர் இருந்தால் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here