நீட் உள்ளிட்ட அனைத்து விதமான நுழைவுத் தேர்வுகளும் ஒத்திவைப்பு – மனிதவள மேம்பாட்டு ஆணையம்..!

0

கொரோனா உலகெங்கிலும் பரவி வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் இந்திய அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருந்தது. மேலும் 1ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வரை தேர்வுகளை ரத்து செய்தது. மேலும் பொது தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நீட் உட்பட நுழைவு தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.

நுழைவுத் தேர்வுகள்

நாட்டில் கொரோனா தோற்று பாதிப்பால் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு( நீட்) உட்பட அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைப்பதென மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நீட் தேர்வுகளுடன் ஜவஹர்லால் பல்கலைக்கழகம், யுஜிசி தகுதிகாண் தேர்வு(நெட்), இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு, ஜேஇஇ உள்ளிட்டவைகளுக்கான நுழைவு தேர்வுகள் யாவும் ஒத்திவைப்பதென முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை – ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?

IBPS recruitment 2018: 4,102 bank probationary Officer vacancies ...

மேலும் இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதியும் ஒத்திவைக்குமாறு தேசிய தேர்வு அமைப்பு இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் கூறியுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here