வெளியான FAU-G கேம் – ரசிகர்களை கவருமா??

0

சில மாதங்களுக்கு முன்பு சீன செயலிகளான pubg உள்ளிட்ட செயலிகளை இந்தியா அரசு தடை விதித்தது. தற்போது pubg செயலிக்கு மாறாக FAU-G கேம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

FAU-G:

கடந்த கொரோனா காலங்களில் மாணவர்கள், இளைஞர்கள் என அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைந்தது இந்த pubg கேம் தான். போர்க்களம் முறையில் அமைந்திருக்கும் இந்த விளையாட்டு சுமார் 100 பேர் ஒரே சமயத்தில் விளையாடும் தன்மையை பெற்றது. இந்த கேமினால் பல உயிர் சேதம் நிகழ்ந்துள்ளது. இதனால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் இந்த கேமினை அழிக்க வேண்டும் என்று கூறிவந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு இந்திய அரசு சீனாவிற்கு சொந்தமான பல செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை செய்தது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த தடைகளில் pubg செயலியும் ஒன்று. இதனால் pubg ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும் சில இந்தியா நிறுவனம் pubg கேமினை உரிமம் பெரும் என்ற தகவல் சில நாட்களாக வந்த வண்ணமாக இருந்தது. ஆனால் அதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் தகவலும் வரவில்லை. தற்போது pubgக்கு மாறாக இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள FAU-G என்னும் கேமினை விளையாட இந்தியா அரசு பரிசீலித்து வந்தது. இதனை பெங்களூருவை சேர்ந்த ncore என்னும் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த கேம் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று பிலே ஸ்டோரில் வெளியிட்டுள்ளனர்.

டெல்லி செங்கோட்டை முற்றுகை, தேசியக் கொடி அகற்றம் – தீவிரமடையும் போராட்டம்!!

இந்த கேமினை கேமின் தூதரர் மற்றும் 2.0 படத்தில் பக்ஷி ராஜனாக நடித்த இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த கேம் சீனாவிற்கு இடையே நடந்த காள்வான் பள்ளத்தாக்கு சம்பவங்களை அடிப்படையாய் கொண்டு உருவாக்கப்பட்ட கேம் ஆகும். இந்த கேமினை ஆப்பில் ஸ்டோரில் வெளியிடப்போகும் பற்றிய தகவல் ரகசியமாக வைத்துள்ளனர். தற்போது pubgக்கு மாறாக இந்த FAU-G வந்துள்ளதால், pubg ரசிகர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப இருக்குமா என்றும் அவர்களை கவருமா? என்ற தகவல் விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here