பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம் – மருத்துவமனை வெளியிட்ட புதிய அறிக்கை!!

0

இந்திய சினிமாவில் மிகப்பெரிய இசை மேதையாக திகழ்ந்து வந்த பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கை வெளியீடு:

இந்திய சினிமாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இசை அரசியாக திகழ்பவர் பாடகி லதா மங்கேஷ்கர். மெலடி குயின் என்று அழைக்கப்படும் இவர், இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதை பெற்றுள்ளார். தேசிய விருது, தாதா சாகேப் பால்கே விருது, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார். 92 வயதான இவர், அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டு மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, தீவிர சுவாச குறைபாடு இருந்து வந்ததாகவும், உடல்நிலை மிகவும் மோசமாகி கவலைக்கிடமாக இருப்பதாகவும் வதந்திகள் எழுந்து வந்தது. இந்த சர்ச்சைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை மிகவும் சீராக இருப்பதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர, வேண்டி வாசகத்துடன் கூடிய மணல் சிற்பத்தை பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் என்பவர் வடிவமைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here